இந்தியா - ரஷ்யா நீண்டகால நண்பர்கள்: மோடி


இந்தியா - ரஷ்யா நீண்டகால நண்பர்கள்: மோடி
x
தினத்தந்தி 21 May 2018 12:34 PM GMT (Updated: 21 May 2018 12:34 PM GMT)

இந்தியாவும் - ரஷ்யாவும் நீண்டகால நண்பர்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #PMModi

ரஷ்யா,

இன்று ஒருநாள் பயணமாக  ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

ரஷ்யாவும் இந்தியாவும் நீண்டநாட்களாக நல்ல நட்புறவை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய நாட்டு அதிபர் புதின் விடுத்த அழைப்பினை ஏற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்துள்ள புதின், இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகம் அளிக்கும் என்று கூறினார். மேலும் ராணுவ அளவிளான இருதரப்பு உறவின் மூலம் பெருமை அடைவதாகவும் புதின் கூறினார்.

மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவுக்கு ஒரு நிரந்தர உறுப்பினர் உதவியை வழங்குவதில் பிரதான பங்களிப்பை செய்ததற்காக மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த பயணத்தின் போது, இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் மோடியும் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி, நட்பு ரீதியிலான சந்திப்புக்கு விளாடிமர் புதின் என்னை அழைத்ததற்காக நன்றி  என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.





Next Story