தாய் இன்றி தவித்த 7 வாத்துக் குஞ்சுகளுக்கு தாயான நாய்


தாய் இன்றி தவித்த 7 வாத்துக் குஞ்சுகளுக்கு தாயான நாய்
x
தினத்தந்தி 23 May 2018 11:55 AM GMT (Updated: 23 May 2018 11:55 AM GMT)

இங்கிலாந்தில் தாய் இன்றி தவித்த வாத்துக் குஞ்சுகளை, நாய் ஒன்று அரவணைத்து கவனித்து கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்

இங்கிலாந்தின்  ஸ்டான்ஸ்டட் கோட்டையில், வாத்து ஒன்று 9 குஞ்சுகளை சமீபத்தில் பொரித்தது. வாத்தும், அதன் குஞ்சுகளும் இரை தேடி சுற்றித் திரிந்ததை லேப்ராடர் இன நாய் ஒன்று கவனித்து வந்தது. இந்நிலையில், தாய் வாத்து கடந்த வாரம் திடீரென காணாமல் போய்விட்டது. இதனைத் தொடர்ந்து, வாத்து குஞ்சுகளை பார்த்த நாய் அவற்றின் அருகில் சென்றது. பின்னர், அவற்றை அரவணைத்தது.

குஞ்சுகளும் அந்த நாயுடன் ஒன்றிவிட்டன. அதன் பின்னர், நாய் செல்லும் இடத்திற்கு குஞ்சுகளும் செல்கின்றன. நாயின் மீது ஏறி நிற்கின்றன. அதன் முதுகில் அமர்ந்து சவாரி செய்கின்றன.

இதுதொடர்பாக ஸ்டான்ஸ்டட் கோட்டையின் இயக்குநர் ஜெராமி கோல்ட்ஸ்மித் கூறுகையில்,

‘குஞ்சுகளிடம் நாய் போகும்போது முதலில் பயந்தோம். ஆனால், தாய் வாத்து இல்லாததை அறிந்து, குஞ்சுகளை அரவணைத்த விதம் கண்டு நெகிழ்ந்து போனோம். ஒரு தந்தையைப் போல் அக்கறையாக பொறுமையாக குஞ்சுகளை கவனிக்கிறது’என தெரிவித்துள்ளார்.

Next Story