வாக்குறுதி அளித்தபடி வடகொரியா அணு ஆயுத தளம் அழிப்பு


வாக்குறுதி அளித்தபடி வடகொரியா அணு ஆயுத தளம் அழிப்பு
x
தினத்தந்தி 24 May 2018 11:30 PM GMT (Updated: 24 May 2018 6:47 PM GMT)

அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியின் படி வடகொரியா தனது அணு ஆயுத தளம் அழித்துள்ளது.

புங்கியே-ரி, 

வடகொரியா, பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்கிற வகையில் அணு ஆயுத சோதனைகளை கை விடுவதாகவும், அணு ஆயுத சோதனை தளத்தை அழிக்கப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு, உலக நாடுகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி சந்தித்து பேசுவது, நிச்சயித்தபடி நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இந்த தருணத்தில் தான் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, தனது நாட்டின் ஒரே அணு ஆயுத சோதனை தளமான புங்கியே-ரி அணு அணு ஆயுத சோதனை தளத்தை வடகொரியா நேற்று வெடி வைத்து தகர்த்தது. அதில் உள்ள சுரங்கங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரியவந்து உள்ளது.

இதை நேரில் காண்பதற்கு வடகொரியா விடுத்த அழைப்பின்படி, வெளிநாடுகளில் இருந்து ஊடகத்தினர் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story