வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை


வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி  கோரிக்கை
x
தினத்தந்தி 26 May 2018 5:16 AM GMT (Updated: 26 May 2018 5:16 AM GMT)

வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை வைத்து உள்ளது.

லண்டன்

 ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இது வெளிநாட்டு சதி என்று வேதாந்தா குழுமத்தின் 71 சதவீத பங்குகளை வைத்துள்ள அதன் தலைவர் அனில் அகர்வால் டுவிட் செய்துள்ளார்.

Next Story