உலக செய்திகள்

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ‘திடீர்’ ஆலோசனை பேசியது என்ன? + "||" + With the US Foreign Minister Pakistan Army Commander Sudden advice What is speaking

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ‘திடீர்’ ஆலோசனை பேசியது என்ன?

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ‘திடீர்’ ஆலோசனை பேசியது என்ன?
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அங்கு நீதிபதி நசிருல் முல்க் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்று, நிர்வாகத்தை கவனித்து வருகிறது.
இஸ்லாமாபாத்,

இந்த தருணத்தில், அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இரு தரப்பு உறவுகள் பற்றி மைக் பாம்பியோவுடன் கமர் ஜாவத் பஜ்வா விவாதித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நல்லிணக்க நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் பேசினர் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த சந்திப்பு பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்து உள்ள டுவிட்டர் பதிவில், “தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை எந்த பாரபட்சமும் இன்றி இலக்கு வைத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவுடன் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ விவாதித்தார்” என கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி
பாகிஸ்தான் இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றது. மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியும் எழுச்சி பெற்றுள்ளது.
2. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்
பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
3. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
4. இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 முறை நடத்தப்படும்; பாகிஸ்தான் எச்சரிக்கை
இந்தியா எங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
5. பாகிஸ்தான்: 35 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
பாகிஸ்தானில் 35 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.