உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + South Korean President Moon J is scheduled to tour Russia from 23rd to 25th

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
*தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ரஷியாவில் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நேரடியாக சந்தித்து பேசுவது பற்றி, இரு நாடுகளும் ஆலோசனை நடத்தி உள்ளதாக ரஷிய ராஜ்ய வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளது.

* பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இந்தியாவின் ஒரு அங்கம் காஷ்மீர் என்பதை காட்டும் வரைபடத்தை கொண்டுள்ள சமூக அறிவியல் பாடத்தை தனியார் பள்ளிகள் கொண்டு உள்ளன. இந்த புத்தகத்துக்கு இப்போது அங்கு திடீரென தடை விதிக்கப்பட்டு உள்ளது.

* தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ரஷியாவில் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார். 1999-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசப்போவது இதுவே முதல்முறை.

* வடக்கு ஈராக் பகுதியில் உள்ள குர்து இன போராளிகளை அந்த நாட்டு அரசு விரட்டியடிக்காவிட்டால், தாங்கள் தாக்குதல் நடத்த நேரும் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரித்து உள்ளார்.

* ஆப்கானிஸ்தானில், அமெரிக்க கூட்டுப்படையில் அங்கம் வகித்து தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்த ஆஸ்திரேலிய படை வீரர்கள், அங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரியவந்து இருப்பதாக ஆஸ்திரேலிய நாளேடு செய்தி வெளியிட்டு உள்ளது.

* டிரம்புடனான சந்திப்புக்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்குவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.