உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் சகோதரி தேர்தலில் போட்டி + "||" + Actor Shahrukh Khan's sister contest in Pakistan

பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் சகோதரி தேர்தலில் போட்டி

பாகிஸ்தானில் நடிகர் ஷாருக்கான் சகோதரி தேர்தலில் போட்டி
பாகிஸ்தான் அடுத்த மாதம் நடவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ஷாருக்கான் சகோதரி சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அப்போது கைபர் பக்துங்வா உள்ளிட்ட சில மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொகுதிகளை அடையாளம் காண்பதிலும், வேட்பு மனு தாக்கலுக்கான வேலையில் ஈடுபடுவதிலும் அரசியல்வாதிகள் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில், பெஷாவர் தொகுதியில் நடிகர் ஷாருக்கானின் ஒன்றுவிட்ட சகோதரி நூர்ஜகான் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்குகிறார்.

இதுபற்றி நூர்ஜகான் கூறும்போது, “பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக நான் பணி ஆற்ற விரும்புகிறேன். எனது தொகுதியில் உள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்வேன்” என்று கூறினார்.

நூர்ஜகான் அங்கு கிசா கிவானி பஜார் அடுத்து உள்ள ஷா வாலி கட்டால் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை குலாம் முகமது, ஷாருக்கான் தந்தை தாஜ்முகமதுவின் மூத்த சகோதரர் ஆவார்.