டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: சிங்கப்பூர் செந்தோசா தீவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: சிங்கப்பூர் செந்தோசா தீவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2018 3:31 AM GMT (Updated: 9 Jun 2018 3:31 AM GMT)

டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்புக்காக சிங்கப்பூர் செந்தோசா தீவில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர்,

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் சிங்கப்பூர் செந்தோசா தீவில் சந்திக்க உள்ளனர். உலக வரலாற்றில் இது ஒரு முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது.

வரும் ஜூன் 12ம் தேதி தென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த சந்திப்பை கூர்ந்த கவனித்து வரும் நிலையில், சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தீவின் பெயர் அர்த்தம், சமாதானம் மற்றும் அமைதியாகும். அதற்கு தகுந்தது போல பெரிய அளவில் அமைதிக்கான சந்திப்பு ஒன்று இங்கு நடக்க உள்ளது.

 இந்த ஹோட்டலில்தான் பொதுவாக வெளிநாட்டு அதிபர்கள் தங்குவது வழக்கம். சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் மோடியும் இங்குதான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை சுற்றி 130 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.  இதற்காக, சில இடங்களை முக்கிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

வருகிற 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும், வான் பரப்பில் வேகத்தை குறைப்பது மற்றும் ஓடுதளங்களை பயன்படுத்துவது போன்றவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Next Story