தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் சண்டை போட்ட குரங்கு


தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் சண்டை போட்ட குரங்கு
x
தினத்தந்தி 9 Jun 2018 7:40 AM GMT (Updated: 9 Jun 2018 7:40 AM GMT)

தான் வசித்த மரங்களை அழித்த ஊழியர்களுடன் ஒரு ஓரங்குட்டான் குரங்கு சண்டை போட்டுள்ளது


ஓரங்குட்டான் குரங்கு ஒன்று தான் தங்கிய மரத்தை அழிக்க வேண்டாம் என்று சண்டை போட்டது தொடர்பான வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.இந்தோனிசியாவின் போர்னியோ பகுதியில் உள்ள சுங்காய் புத்ரி காட்டில் உள்ள மரங்களை புல்ட்ரோசர் வைத்து அழித்துள்ளனர்.அப்போது மரம் ஒன்றை புல்ட்ரோசர் உடைத்து கொண்டிருந்த போது, அந்த மரத்தில் இருந்த ஓரங்குட்டான் குரங்கு ஒன்று, புல்ட்ரோசரனை பிடித்து ஒன்றும் செய்ய வேண்டாம் என்பது போல் செய்கை காட்டியது.

அதன் பின் கீழே சென்ற போது மீண்டும் மரத்தை உடைப்பதற்கு புல்ட்ரோசர் வைத்து முயற்சி செய்த போது, மீண்டும் குரங்கு மேலே வந்து தடுத்தது.இது தொடர்பான வீடியோ 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய் கிழமை சர்வதேச விலங்கு நல அமைப்பு வெளியிட்டுள்ளது.ஆனால் காட்டில் இருந்த மரங்கள் ஏன் அழிக்கப்பட்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


Next Story