உலக செய்திகள்

ஐரோப்பாவிலேயே சிறந்த ரெயில்வே துறை! + "||" + The best railway industry in Europe

ஐரோப்பாவிலேயே சிறந்த ரெயில்வே துறை!

ஐரோப்பாவிலேயே சிறந்த ரெயில்வே துறை!
ஐரோப்பிய ரெயில்வே துறைகள் மிகவும் சிறப்பானவை, விமானப் பயணத்துக்கு இணையான வசதிகளை வழங்குபவை.
சுவிட்சர்லாந்து நாட்டின் ரெயில்வே துறைதான் ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்தது எனத் தெரிய வந்திருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘லோகோ2’ என்ற பயணம் தொடர்பான இணையதளம், ஐரோப்பாவில் சிறந்த ரெயில்வே துறை எது என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது.


இதில் 16 நாடுகளின் ரெயில்வே துறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பில் சுவிட்சர்லாந்து ரெயில்வே முதலிடத்தை பிடித்து, ஐரோப்பாவிலேயே சிறந்த ரெயில்வே என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

சுவிஸ் ரெயில்வேயில் குழந்தைகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கு விசேஷ வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள், சைக்கிள் ஓட்டிகள் போன்றோருக்குத் தேவையான வசதிகளும் செய்யப்பட்டிருப்பதால் அந்நாட்டு ரெயில்வே முன்னணியில் திகழ்கிறது.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன வசதிகளை அந்நாட்டு ரெயில்கள் கொண்டுள்ளன. அத்துடன், பனிக்காலத்தில் சலுகை விலையில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகள் வழங்குவதையும் இந்த ரெயில்வே மேற்கொள்கிறது.

அதேபோல் நல்ல உணவை வழங்குவதில் சுவிஸ் ரெயில்வே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பேணுவதில் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்த ரெயில்வே உள்ளது.

இவற்றின் அடிப்படையில்தான் ஐரோப்பாவிலேயே சிறந்த ரெயில்வேயாக சுவிட்சர்லாந்து ரெயில்வே தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மரங்களின் பாட்டு
ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கல்லூரி ஒரு புதுமையான கருவியை உருவாக்கி இருக்கிறது.