குறைபாட்டைச் சுட்டிக்காட்டிய இளைஞருக்கு ரூ.24 லட்சம் பரிசு!


குறைபாட்டைச் சுட்டிக்காட்டிய இளைஞருக்கு ரூ.24 லட்சம் பரிசு!
x
தினத்தந்தி 9 Jun 2018 10:18 AM GMT (Updated: 9 Jun 2018 10:18 AM GMT)

கூகுளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய உருகுவே நாட்டு டீனேஜ் இளைஞருக்கு அந்நிறுவனம் ரூ. 24 லட்சத்தை பரிசாக வழங்கியுள்ளது.

கூகுள் தனது குறைபாடுகளைச் சரிசெய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி நடத்தப்பட்ட போட்டியில், உருகுவே நாட்டைச் சேர்ந்த எஸெக்கீல் பெரைரா என்ற 17 வயது இளைஞர், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மூலம் ஹேக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.

இதையடுத்து அந்தக் குறைபாடுகளைச் சரிசெய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்த இளைஞருக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக அளித்துள்ளது.

எஸெக்கீல் ஏற்கனவே இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் குறைபாட்டைக் கண்டுபிடித்ததற்காக இவ்வளவு பெரிய பரிசுத்தொகை பெறுவது இதுவே முதல்முறை.


Next Story