ஜூலை 17 -ம் தேதி முதல் யாகூ மெசேஞ்சர் சேவை நிறுத்தம்


ஜூலை 17 -ம் தேதி முதல் யாகூ மெசேஞ்சர் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Jun 2018 12:24 PM GMT (Updated: 9 Jun 2018 12:24 PM GMT)

யாகூ மெசேஞ்சர் சேவை அடுத்த மாதம் 17-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே முதல்முறையாக குறுந்தகவல் அனுப்ப 1998-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி யாகூ பேஜர் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.  வாட்ஸ் அப், பேஸ்புக் மெசேஞ்சர் என பல்வேறு அதிநவீன குறுந்தகவல் அனுப்பும் வசதிகளின் ஆதிக்கம் அதிகரித்ததால், யாகூ மெசேஞ்சரின் மவுசு குறைந்து போனது.

இதன் காரணமாக, யாகூ மெசேஞ்சர் சேவையை ஜூலை 17-ஆம் தேதி முதல் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாகூ மெசேஞ்சர் பயன்பாட்டாளர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை அடுத்த மாதங்களுக்கு டவுன்லோடு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாகூ மெசேஞ்சருக்கு மாற்றாக, யாகூ ஸ்குரெல் ((Yahoo Squirrel)) என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story