உலக செய்திகள்

சவுதி அரேபியா: மெக்கா மசூதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் தற்கொலை + "||" + Saudi Arabia: Suicide by France in Mecca Mosque

சவுதி அரேபியா: மெக்கா மசூதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் தற்கொலை

சவுதி அரேபியா: மெக்கா மசூதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் தற்கொலை
மெக்கா மசூதியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MeccaMosque
ரியாத்,

சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியானது, இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான இஸ்லாமிய யாத்ரீகர்கள் உலகம் முழுவதும் இருந்து மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மெக்காவில் உள்ள இந்த மசூதியின் மூன்றாவது தளத்தில் இருந்து ஒருவர் திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. மேலும் அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று சவுதி மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புனித நகரமான மெக்காவில் இப்படி நடைபெறுவது இது முதல் முறை அல்ல. கடந்தாண்டு சவுதியைச் சேர்ந்த, ஒருவர் மெக்கா மசூதியின் காபா முன்பு தீக்குளிக்க முயன்றார். ஆனால், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.  இஸ்ஸாம் மதம், மற்ற மதங்களைப் போல தற்கொலைக்குத் தடை செய்கிறது. புனித ரமலான் மாதத்தில், மெக்கா மசூதியில் நிகழ்ந்த இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.