சவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி


சவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2018 10:30 PM GMT (Updated: 10 Jun 2018 9:35 PM GMT)

சவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரியாத், 

ஏமன் நாட்டில் அதிபர் அபு ரப்பு மன்சூர் அல்ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. தலைநகர் சனாவும், முக்கிய நகரங்களும் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ளன.இந்தப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி, கிளர்ச்சியாளர்கள் மீது வான்தாக்குதல் நடத்தி வருகின்றன.இதற்கு பழி வாங்கும் விதத்தில் கிளர்ச்சியாளர்கள், சவுதி மீது அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்த தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சவுதி மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகினர்.

இதை சவுதி அரசுக்கு சொந்தமான அல் ஏக்பரியா டி.வி. அறிவித்தது.

Next Story