உலக செய்திகள்

உறுதிமொழியை நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர் + "||" + To fulfill the promise Dead beloved Married

உறுதிமொழியை நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர்

உறுதிமொழியை நிறைவேற்ற உயிரிழந்த  காதலியை திருமணம் செய்தவர்
நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்ற உறுதிமொழி நிறைவேற்ற உயிரிழந்த காதலியை திருமணம் செய்தவர்.

தென் ஆப்பிரிக்காவில் காதலி உயிரிழந்த நிலையில் அவர் சடலத்தை திருமணம் செய்த காதலனின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. டர்பன் நகரில் உள்ள ஒசிண்டிஸ்வினி பகுதியைச் சேர்ந்தவர் ஜபுலனி துலுங்வேன். இவரும் சிந்தி குமுலோ என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இரு வாரங்களில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சிந்தி இரு தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். உயிராக நேசித்த காதலியின் மரணத்தால் துடித்து போன ஜபுலனி மனதை கல்லாக்கி கொண்டு ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார்.

அதன்படி சடலமாக கிடந்த சிந்தியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஜபுலினி திருமணம் செய்து கொண்டார். இதை பார்த்த நண்பர்களும் உறவினர்களும் கண் கலங்கினார்கள். தனது சமூகவழக்கப்படி உடைகள் அணிந்த நிலையில் ஜபுலின் சிந்துவை மணந்தார். இது குறித்து ஜபுலினி கூறுகையில், நான் சிந்தியை நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியளித்திருந்தேன், அதை தற்போது நிறைவேற்றியுள்ளேன்.அவர் இறந்துவிட்டாலும் என் மனதில் எப்போதும் வாழ்வார் என உருக்கமாக கூறியுள்ளார். சிந்தியை திருமணம் செய்த பின்னர் அவரின் சடலத்தை தன் கையால் ஜபுலினி புதைத்தது காண்போரின் கண்களை குளமாக்கியது.