வட கொரிய தலைவருடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை


வட கொரிய தலைவருடன் நடைபெறும் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2018 11:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:19 PM GMT)

சிங்கப்பூரில் இன்று வட கொரிய தலைவருடன் நடைபெறும் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்,  

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலம் கனிந்து இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு (இந்திய நேரம் காலை 6.30 மணி) சந்தித்து பேச்சுவார்தை நடத்துகிறார்கள். இதற்காக இரு தலைவர்களும் நேற்று முன்தினம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. இன்று நடைபெற இருக்கும் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுவதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

பேச்சுவார்த்தை முடிந்து, டிரம்ப் இன்று அமெரிக்கா திரும்புகிறார். ஒரு நாள் முன்னதாக உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அவர் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா திரும்புவதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

Next Story