உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு + "||" + Trump's chief economic adviser Kudlow suffers heart attack

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதன்மை வர்த்தக ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. #LarryKudlow
சிங்கப்பூர்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதன்மை வர்த்தக ஆலோசகர் லெர்ரி குட்லேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெர்ரி சிகிச்சைக்காக வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இதனிடையே கிம் ஜாங் அன் உடனான சந்திப்பிற்கு செல்லும் வழியில் அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர் லெர்ரி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.