புதிய வரலாறு படைக்க அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன டொனால்டு டிரம்ப்


புதிய வரலாறு படைக்க  அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 12 Jun 2018 9:08 AM GMT (Updated: 12 Jun 2018 9:08 AM GMT)

புதிய வரலாறு படைக்க அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன என டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit

சிங்கப்பூர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறிய முக்கிய அமசங்கள் வருமாறு:-

* வடகொரிய தலைவர் கிம்-உடனான சந்திப்பு மிகவும் நேர்மையானது. வடகொரியா-அமெரிக்கா இடையேயான கசப்புணர்வு மறைந்துள்ளது 

* புதிய வரலாறு படைக்க இரு நாடுகளும் தயாராகின்றன; அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

* புதிய வரலாறு படைக்க  அமெரிக்காவும் - வடகொரியாவும் தயாராக உள்ளன.

* ஏவுகணை தளங்களை அழிப்பதாக வட கொரியா உறுதி அளித்துள்ளது. 

* யாரும் போர் தெடுக்கலாம். துணிச்சலானவர்களால் மட்டுமே அமைதியை உருவாக்க முடியும்

* வடகொரியா- தென் கொரியாவில் பிரிந்துள்ள குடும்பங்கள் விரைவில் ஒன்றிணையும்.

* அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜான் அன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. என கூறினார்

Next Story