வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது, நிம்மதியாக உறங்கலாம் - டொனால்டு டிரம்ப்


வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது, நிம்மதியாக உறங்கலாம் - டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:52 AM GMT (Updated: 13 Jun 2018 11:52 AM GMT)

வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட் செய்து உள்ளார். #NorthKorea #DonaldTrump

நியூயார்க்,

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன், வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என  வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டொனால்டு டிரம்ப் அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். 

இதனையடுத்து அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், நான் ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றபோதைவிட இப்போது எல்லோரும் பாதுகாப்பாக உணரமுடியும். வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு சுவாரஸ்யமாகவும், மிகவும் சாதகமான அனுபவமாகவும் இருந்தது. எதிர்காலத்திற்கான பெரும் ஆற்றலை வட கொரியா கொண்டுள்ளது.

நான் அதிபராக பதவியேற்பதற்கு முன்னதாக அப்பதவியில் இருந்தவர் வடகொரியாவுடன் போரிடப்போகிறோம் என்றார். அமெரிக்காவுக்கு வடகொரியா மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார், இனி அச்சப்பட வேண்டிய தேவையில்லை, நிம்மதியாக உறங்கலாம் என பதிவிட்டு உள்ளார். 


Next Story