உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வரும் இந்திய மாணவர் ரிக்கேஷ் அத்வானி, இனவெறி தாக்குதலுக்கு ஆளானார்.
*தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வந்து உள்ளதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ. கூறி இருக்கிறது.

* மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய மகாதீர் முகமது அரசு களையெடுப்பதைத் தொடர்ந்து அந்த நாட்டின் 2 மூத்த நீதிபதிகள் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளனர்.

* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இதன் சேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

* பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில், நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் 2 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தார். ஆனால் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து, பிணைக்கைதிகளை பத்திரமாக விடுதலை செய்தனர்.