உலக செய்திகள்

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை + "||" + 19 months jail sentenced to former president of Maldives

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை
மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978–ம் ஆண்டு முதல் 2008–ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார்.

மாலே,

தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து, மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.