உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* துருக்கி நாட்டின் இஸ்தான்புல், இஜ்மிர் நகரங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிற 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
* தென் கொரியாவுடனான போர் பயிற்சி நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ள நிலையில், தென் கொரியாவும், வடகொரியாவும் 10 ஆண்டுகளில் முதல் முறையாக ராணுவம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

* காசாவில் நடந்த வன்முறை சம்பவங்களில் 129 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதையொட்டி, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் கண்டன தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் ஓட்டுபோட்டன. 45 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.


* ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஹூதைதா நகரத்தை கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீட்பதற்காக சவுதி கூட்டுப்படைகள் நேற்று இரண்டாவது நாளாக கடுமையான தாக்குதலில் ஈடுபட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
* ஹாங்காங்கில் சிங் மூன் என்கிற இடத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்தார். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. உலகைச்சுற்றி...
பிஜி மற்றும் டோங்கா ஆகிய நாடுகளுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. உலகைச்சுற்றி...
* வட கொரியா இன்னும் அணுசக்தி பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகிறார்.