உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து; 2 பேர் பலி + "||" + In South Africa, a knife stab in the mosque 2 killed

தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து; 2 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து; 2 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவில் மால்மேஸ்பரி நகரில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதியில் நேற்று தொழுகை நேரத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கே தன் கண் எதிரே பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்திச் சாய்த்தார்.

ஜோகன்னஸ்பர்க்,

மசூதியில் தொழுகைக்கு கூடி இருந்தவர்கள் அலறியடித்தவாறு நாலா புறமும் ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரை உடனடியாக சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அந்த நபர், அதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அவர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது பயங்கரவாதத்தின் கூறு என கூறினர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. சிவகிரி அருகே உருட்டு கட்டையால் தாக்கி மின் வாரிய பெண் ஊழியர் படுகொலை; கணவர்– மாமியார் வெறிச்செயல்
சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி அவருடைய கணவர் மற்றும் மாமியார் படுகொலை செய்தனர்.
2. மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் சாவு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் மரணமடைந்தார்.
3. ராணுவ வீரர் கண்முன்னே மனைவி-மகள் பலி : தேனி அருகே பரிதாபம்
தேனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த மனைவி, மகள் ஆகியோர் ராணுவ வீரர் கண்முன்னே லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; ஜவுளிகடை ஊழியர் பலி
பொன்னமராவதி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜவுளிகடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5. புதுப்பட்டினம் கிராமத்தில் மின்னல் தாக்கி கோபுரம் சேதம்
தொண்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது.