உலக செய்திகள்

குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு + "||" + US child migrants Melania speaks out on Trump separation policy

குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்ப் திட்டத்திற்கு அவருடைய மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #MelaniaTrump

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என டிரம்ப் நகர்ந்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை டொனால்டு டிரம்ப் அரசு முன்னெடுத்து வருகிறது.

அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. அடைக்கலம் கோரி அமெரிக்காவிற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன.

இந்நிலையில் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். “குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன், ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தை விரும்புகிறேன்,” என மெலானியா கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் குடிமகளான லாரா புஷ், குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது என விமர்சனம் செய்துள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. சர்சையை ஏற்படுத்திய டொனால்டு டிரம்பின் தீபாவளி வாழ்த்து
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடியது தொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்ட டுவீட் சர்சையைக் கிளப்பியுள்ளது.
2. சி.என்.என் செய்தியாளருடன் டொனால்டு டிரம்ப் வாக்குவாதம்
சி.என்.என் செய்தியாளருடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
3. அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை இடைத்தேர்தல் : டொனால்ட் டிரம்புக்கு பின்னடைவு
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
4. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
5. வடகொரிய அதிபரை விரைவில் மீண்டும் சந்திப்பேன்: டொனால்டு டிரம்ப் தகவல்
வடகொரிய அதிபரை விரைவில் மீண்டும் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.