உலக செய்திகள்

காரில் செல்லும்போது மேக்-அப்; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் + "||" + Make-up on the car: Disaster for woman

காரில் செல்லும்போது மேக்-அப்; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

காரில் செல்லும்போது மேக்-அப்; பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்
காரில் செல்லும்போது மேக்-அப் போட்டதால், ஒரு பெண்ணுக்கு விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாங்காங்,

தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை அவரது டிரைவர் ஓட்டிக்கொண்டிருந்தபோது காரின் பின்சீட்டில் இருந்த அந்த இளம்பெண் தனது கண்புருவத்தையும் கண்ணையும் அழகுபடுத்த கருப்பு பென்சிலால் மையிட்டு கொண்டிருந்தார்.


அப்போது எதிர்பாராத வகையில் அவர் சென்று கொண்டிருந்த கார் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின்மீது திடீரென மோதியது. இதனால் பென்சிலால் கண் மை போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் இடது கண்ணுக்குள் அந்த பென்சில் சொருகி கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது டிரைவர் உடனடியாக அந்த பெண்ணை வேறொரு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அவருடைய கண்ணில் இருந்து அந்த பென்சிலை லாவகமாக எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. மேலும் அவரின் கண்ணில் முக்கிய பகுதிகள் சேதமடைந்திருப்பதாகவும் ஆனால் அது சரி செய்யும் வகையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்காதலை கைவிட பெற்றோர் அறிவுரை - 2 வயது மகளை கொன்று பெண் தூக்குப்போட்டு தற்கொலை
2 வயது மகளை கொன்று பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு எதிர்ப்பு; பக்தர்கள் போராட்டம்
சபரிமலை தரிசனத்திற்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
4. நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் உள்பட 3 பேர் இறந்தனர்.
5. ரேஷன்கடையில் தூங்கிய பெண் தலையில் கல்லை போட்டு கொலை - நள்ளிரவில் மர்மநபர் வெறிச்செயல்
ஆம்பூர் அருகே ரேஷன்கடையில் தூங்கிய பெண்ணை தலையில் பாறாங்கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.