உலக செய்திகள்

தாயின் சவப்பெட்டி: மகனுக்கு எமனாக மாறிய கொடூரம் + "||" + Man killed by mother's falling coffin in Indonesia

தாயின் சவப்பெட்டி: மகனுக்கு எமனாக மாறிய கொடூரம்

தாயின் சவப்பெட்டி: மகனுக்கு எமனாக மாறிய கொடூரம்
தாயின் இறுதிச்சடங்கின் போது, அந்த சவப்பெட்டியே மகனுக்கு எமனாக மாறிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Indonesia
இந்தோனேசியா,

இந்தோனேசியாவில் தாய் இறந்து இறுதிச்சடங்கின் போது அவரது உடலை சுமந்து சென்ற சவப்பெட்டி தவறி மேலே விழுந்ததில் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டொருரா(40). சமீபத்தில் இவரது தாயார் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.


இறந்த அவரது தாயின் இறுதிச்சடங்கு வடக்கு டொராஜா மாவட்டத்தில் உள்ள பரின்டிங் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் நடைபெற இருந்தது .அது கொஞ்சம் மேடான பகுதி என்பதால் மூங்கில் ஏணியின் உதவியுடன் இறந்தவரின் உடலை வைத்துள்ள மரத்தாலான சவப்பெட்டியை மேலே தூக்கி சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சவப்பெட்டி தவறி கீழே விழுந்தது. இதில் முன்புறம் சென்று கொண்டிருந்த சமேன் கோண்டொருரா மீது அந்த சவப்பெட்டி விழுந்தது.

அதனால் படுகாயம் அடைந்த அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சமேன் கோண்டொருரா தனது தாயின் இறுதிச்சடங்கு முடியும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்திற்கு காரணம் ஏணி வலுவாக இல்லாததே என தெரியவந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். தற்போது கோண்டொருராவின் உடல் அவரின் தயாரின் உடலருகே புதைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.