பாக்.முன்னள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மனைவியின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தகவல்


பாக்.முன்னள் பிரதமர்  நவாஸ் ஷெரீப், மனைவியின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2018 9:21 AM GMT (Updated: 19 Jun 2018 9:21 AM GMT)

லண்டனில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப் மனைவியின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி கல்சூம் ஷெரீப் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோயால் அவதிப்படும் கல்சூம் ஷெரீப் லண்டனில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லண்டனில் சிகிச்சை பெறும் மனைவி கல்சூம் ஷெரீப்பை, நவாஸ் ஷெரீப் அவ்வப்போது நேரில் சென்று சந்தித்தும், சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தும், உடன் இருந்து கவனித்தும் வருகிறார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஹார்லே ஸ்ட்ரீட் கிளினிக்கில் கல்சூம் ஷெரிப், சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை, கல்சூம் ஷெரிப்புக்கு இருதய மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 14 (ஜூன்) ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கல்சூம் ஷெரீப், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

கல்சூம் ஷெரீப்புக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. இதன்காரணமாக, தற்போது லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள்  மர்யம் ஷெரீப்  ஆகியோர் பாகிஸ்தான் திரும்புவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. 

Next Story