உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 22 Jun 2018 12:00 AM GMT (Updated: 21 Jun 2018 9:19 PM GMT)

சீன அதிபர் ஜின்பிங்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ராணுவ, தந்திர உத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டு உள்ளனர்

* சீனா உலகளாவிய உருக்கு சந்தையை இடையூறு செய்வதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் சாடி உள்ளார்.

* தலீபான்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டு வருவதற்கான உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கூறி உள்ளது.

* சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசிய உச்சி மாநாட்டுக்கு பின்னர், வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக ஜப்பான் நடத்தி வந்த ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விட முன் வந்து உள்ளது.

* சீன அதிபர் ஜின்பிங்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ராணுவ, தந்திர உத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டு உள்ளனர்.

* போரினால் உருக்குலைந்து போய் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு தொண்டு உதவிகளை செய்வதில் இந்தியா பொறுப்பு வாய்ந்த நாடாக திகழ்கிறது என அமெரிக்கா பாராட்டி உள்ளது.

* ஈராக் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு அந்த நாட்டின் சுப்ரீம் பெடரல் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Next Story