நைஜீரியாவில் பயங்கர வன்முறை: 86 பேர் கொல்லப்பட்டதாக தகவல்


நைஜீரியாவில் பயங்கர வன்முறை: 86 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2018 1:19 AM GMT (Updated: 25 Jun 2018 1:19 AM GMT)

நைஜீரியாவில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது. 86 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ், 

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story