உலக செய்திகள்

குப்பை சாமுராய் + "||" + Trash Samurai

குப்பை சாமுராய்

குப்பை சாமுராய்
ஜப்பானில் உள்ள ‘ஹோமி ஹிரோய் சாமுராய்’ குழு, தெருக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே குப்பைகளையும் சேகரிக்கிறார்கள்.
பழங்கால சாமுராய் வீரர் களைப் போல் உடை, தொப்பி, காலணிகளை அணிந்து மிக நேர்த்தியாக நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இன்றைய இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய நடனங்கள் என்று தங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குவதில் வல்லவர்கள்.

சாமுராய் கலைஞர்களாக இருந்தவர்கள், குப்பைகளை அள்ளும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகு, ஜப்பான் முழுவதும் பிரபலமாகிவிட்டனர்.

‘‘ஜப்பானிய நகரங்களில் குப்பைகள் அதிகம். அதிலும் பண்டிகைக் காலங்களில் குப்பை பல மடங்கு அதிகரித்து விடும். அப்படிப்பட்ட ஒரு பண்டிகை காலத்தில்தான் சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்தோம். இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகக் கடமை இருப்பதாக நினைக்கிறோம்.

எங்கள் குழுவின் முக்கிய முழக்கம் மனிதர்களை நேசியுங்கள் என்பதுதான். குப்பை அகற்றுவது மகத்தான பணி என்பதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். பல நகரங்களிலும் எங்களின் குழுக்கள் இயங்கி வருகின்றன’’ என்கிறார் ஜிடாய்குமி.