உலக செய்திகள்

ஆச்சரிய கிராமம் + "||" + Surprise Village

ஆச்சரிய கிராமம்

ஆச்சரிய கிராமம்
ருமேனியாவின் பானட் மலைத் தொடர்களில் இருக்கிறது அழகான எபின்தல் கிராமம். இங்கே செக் இன மக்கள் வாழ்கிறார்கள்.
உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக எபின்தல் கிராமம் திகழ்கிறது! ஏனெனில் இங்கு குற்றங்களே நடைபெறுவதில்லையாம்.

குறிப்பாக திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது! அதனால் இந்த ஊரில் காவல் நிலையமே கிடையாது.

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும் பணமும் வைக்கப்படுகின்றன. இந்த பையில் எவ்வளவு பணம் இருந்தாலும், யாரும் எடுக்க மாட்டார்களாம்.

ஊருக்குள் ரொட்டி கொண்டு வருபவர் மட்டும் பணத்தை எடுத்துக் கொண்டு ரொட்டியை வைத்துவிட்டு செல்கிறார். அந்தளவிற்கு கட்டுப்பாடான கிராமம் அது.