உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 8 July 2018 12:00 AM GMT (Updated: 7 July 2018 8:07 PM GMT)

கனடாவில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் அனல் காற்றுக்கு இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

* வடகொரியாவின் பியாங்யாங் நகரில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ 2-வது நாளாக நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா, ஒரேகான் மாகாணங்களின் எல்லையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

* டுவிட்டர் நிறுவனம், மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் 7 கோடி போலி கணக்குகளை மூடி விட்டதாக அறிவித்து உள்ளது.

* கனடாவில் கோடை வெயில் காரணமாக அனல் காற்று வீசி வருகிறது. ஒரு வார காலத்தில் அனல் காற்றுக்கு அங்கு 54 பேர் பலியாகி உள்ளனர்.

* பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., தனது தலைமையகம் அமைந்து உள்ள சாலையில் ஏற்படுத்தி உள்ள தடுப்புகளை 2 மாதங்களில் அகற்றி விட வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Next Story