தாய்லாந்து குகையில் சிக்கி உள்ள சிறுவர்களை மீட்க சிறியவகை நீர்மூழ்கி கப்பல்


தாய்லாந்து குகையில் சிக்கி உள்ள சிறுவர்களை மீட்க சிறியவகை நீர்மூழ்கி கப்பல்
x
தினத்தந்தி 9 July 2018 9:09 AM GMT (Updated: 9 July 2018 9:11 AM GMT)

தாய்லாந்து குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளன. #Thailandcave


தாய்லாந்தின் தாம் லுவாங் பகுதியில் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, உள்ளூர் பள்ளி ஒன்றின் இளம் கால்பந்து அணி வீரர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து சுற்றுலா சென்றிருந்தனர். அப்பொழுது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணாமாக 12 சிறார்களும் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து குகைக்குள் சிக்கி உள்ளனர்

குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியுள்ளது.தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது. தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.இதற்கிடையில் குகையில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க பிரத்யேகமாக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்  சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்ரை உருவாக்கி உள்ளது. இது வெறும் எட்டு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

மீட்பு குழு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள இடத்தில் தான் சிறுவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடத்தை அடைய மிகவும் குறுகலான பகுதியை தாண்டி வர வேண்டும். இந்த பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தும் வேலை தற்போது நடந்து வருகிறது. ஆனால் இந்த வேலை மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது

இதற்காக எலோன் மஸ்க் வேறொரு ஐடியாவை உருவாக்கி உள்ளார். அதன்படி குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். இதை வெளியில் இருந்து இயக்க முடியும். இது முழுக்க தானாக இயங்கும் திறனும் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது தானாகவும் இயங்கும், வெளியில் இருந்தும் இயங்க வைக்கலாம். இதை குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி, உள்ளே ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப முடியும். இதை இப்போது சோதனை செய்து வருகிறார்கள். வெறும் 8 மணி நேரத்தில் இந்த மொத்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் சில நிமிடத்தில் தாய்லாந்து கொண்டு செல்ல உள்ளனர்.


Next Story