உலக செய்திகள்

இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் + "||" + Moon and Mars line up rare treat

இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்

இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்
வானியல் சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் இரண்டு அற்புதங்கள் நடைபெற உள்ளன.
வரும் ஜூலை 27-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இதனை காணமுடியும். சிறப்பு என்னவென்றால், இந்த நூற்றாண்டின் அரிய மிக நீண்ட சந்திர கிரகணமாக இது கருதப்படுகிறது.

இந்த சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் மற்றொரு வானியல் அற்புதம் நடைபெற உள்ளது. சூரியனில் இருந்து 4-வது இடத்தில் இருக்கும் கோளானது செவ்வாய் கோளாகும். இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி, செவ்வாய் கோளானது பூமிக்கு அருகில் அதாவது 5.76 கோடி கி.மீ தொலைவிற்கு வர உள்ளது.

ஏற்கெனவே கடந்த 2003-ஆம் ஆண்டு இதற்கு முன்னதாக செவ்வாய் கோள் பூமிக்கு அருகில், அதவாது 5.57 கோடி கி.மீ தொலைவில் வந்திருந்தது. இதுவே கடந்த 60,000 ஆண்டுகளில் செவ்வாய் ஆனது பூமிக்கு மிக அருகில் வந்த சம்பவமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் செவ்வாய் கோளானது பூமியை நெருங்க உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் (ஜூலை 31) தேதி செவ்வாய் கோளானது வெளிச்சத்துடன், கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அன்றை தினம் சூரிய மறைவிற்கு பின்னரும் அதற்கு அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன்னரும் இதனை காணலாம் என கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் வானியல் அறிவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பூமியை போன்று 2 உலகங்கள் கண்டு பிடிப்பு
பூமியை போன்று 2 உலகங்களை நாசா கெப்லர் விண்கலம் கண்டு பிடித்து உள்ளது.
2. குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் மார்பகத்தை அகற்றுகிறார்
குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெயருக்கு சொந்தக்காரரான ஹைடன் கிராஸ் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
3. நிலவிற்கு முதல் முறையாக செல்லும் சுற்றுலா பயணி ஜப்பான் கோடீசுவரர்
ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. உயிர் உண்டு! தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன ஆய்வில் தகவல் - வீடியோ
தாவரங்களுக்கும் உயிர் உண்டு! உயிரினங்கள் போன்றே தாவரங்கள் காயம் அடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினை காட்டுகின்றன. விலங்குகள் அவற்றைப் போன்றவைகளை உருவாக்குகின்றன என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5. புதிய புராதன உயர் விலங்கினங்கள் மூன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்
அறிவியலாளர்கள் புராதன பழங்கால உயர் விலங்கினங்களான மூன்றை அடையாளம் கண்டுள்ளதாக கூறி உள்ளனர்.