உலக செய்திகள்

அமைதியை உருவாக்கும் நோக்கத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ‘திடீர்’ ஆப்கன் பயணம் + "||" + Pompeo makes unannounced trip to Kabul, says Trump’s Afghan strategy is ‘working’

அமைதியை உருவாக்கும் நோக்கத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ‘திடீர்’ ஆப்கன் பயணம்

அமைதியை உருவாக்கும் நோக்கத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ‘திடீர்’ ஆப்கன் பயணம்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, முன்அறிவிப்பின்றி நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகருக்கு திடீரென சென்றார்.
காபூல், 

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, முன்அறிவிப்பின்றி நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகருக்கு திடீரென சென்றார். அவரது வருகையை ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் நாடு, போரால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதியை உருவாக்கும் நோக்கத்தில், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் மைக் பாம்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.