அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரின் விதவை மனைவி சீனாவை விட்டு வெளியேறினார்


அமைதிக்கான  நோபல்  பரிசு பெற்றவரின் விதவை மனைவி சீனாவை விட்டு வெளியேறினார்
x
தினத்தந்தி 10 July 2018 8:28 AM GMT (Updated: 10 July 2018 8:28 AM GMT)

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சீனாவை சேர்ந்த லியு ஜியாபோவின் விதவையான மனைவி லியு ஸியா, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்து விடுதலையாகி சீனாவை விட்டு வெளியேறினார்.



சீனாவை சேர்ந்த லியு ஜியாபோ அமைதிக்கான நோபல்  பரிசு பெற்றவர்.  இவர் நுரையீரல் புற்றுநோயால் கடந்த ஜூலை மாதம் வடகிழக்கு சீனாவில் ஒரு மருத்துவமனையில் இறந்தார். அரசு அதிகாரத்தை தவறாக பயனபடுத்தியதற்காக அவருக்கு  11 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கபட்டு இருந்தது . ஒரு மாதத்திற்கு  முன்பு  அவருக்கு பரோல் கிடைத்து இருந்தது.

கணவர் லியு ஜியாபோ 2010 இல் நோபல் விருது பெற்றதில் இருந்து  அவரது மனைவி பல்வேறு காரணங்களுக்காக வீட்டுக் காவலில்  வைக்கபட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சைக்காக கூட  நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று லியு ஸியா விடுதலையாகி  ஜெர்மனிக்கு சென்றார். இதனை அவரது சகோதரர்  லியு ஹுய்  சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்து உள்ளார்.

லியு ஜியா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பல ஆதாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. 

Next Story