உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 10 பேர் படுகொலை + "||" + 10 killed in suicide attack on Afghan security forces: officials

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 10 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 10 பேர் படுகொலை
ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஜலாலாபாத்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கே ஜலாலாபாத் நகரில் வெடிகுண்டை கட்டி கொண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பாதுகாப்பு படையினரின் வாகனம் அருகே இன்று வந்துள்ளார்.  அவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்றும் தீப்பிடித்துள்ளது.  இந்த தற்கொலை தாக்குதலில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களில் பலர் பொதுமக்கள் என கூறப்படுகிறது.  4 பேர் காயமடைந்து உள்ளனர்.