உலக செய்திகள்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் + "||" + elon musk attempts to aid thai cave rescue with spaceX 'kid-sized' submarine

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க, ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனர் எலோன் மஸ்க் நேரடியாக குகைக்குள் சென்று பார்வையிட்டுள்ளார். #ElonMusk #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களில் 11 சிறுவர்கள்  வரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 16 நாட்களாக குகைக்குள்ளேயே இருக்கும் அவர்களை மீட்க, ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லும் வகையில் சிறிய வகை நீர் மூழ்கி கப்பலை உருவாக்கியது.

ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனர் எலோன் மஸ்க் இந்த சிறிய நீர் மூழ்கி கப்பலை 8 மணிநேரத்திலேயே உருவாக்கினார். இதனை பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் அவர் உருவாக்கினார். இதனை தன்னுடைய பணியாளர்களை கொண்டு பயன்படுத்துவதாக எலோன் மஸ்க் முதலில் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அவராகவே களத்தில் குதித்துள்ளார். இதற்காக சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்த எலோன், உடனடியாக தாய்லாந்துக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, தன்னுடைய குழுவினருடன் நேற்று இரவு சிறுவர்கள் சிக்கிக்கொண்ட குகைக்குள் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால், எலோன் மஸ்க்கின் நீர் மூழ்கி கப்பலை பயன்படுத்துவது குறித்து தாய்லாந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.