11 வயது சிறுமியை 40 வயதான நபர் திருமணம்; ரூ.14 ஆயிரம் அபராதம்


11 வயது சிறுமியை 40 வயதான நபர் திருமணம்; ரூ.14 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 11 July 2018 7:05 AM GMT (Updated: 11 July 2018 7:05 AM GMT)

11 வயது சிறுமியை 40 வயதான நபர் திருமணம் செய்த நிலையில் அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த  சீ அப்துல் அமீத் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து உள்ளது.  மூன்றாவதாக 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.இச்சம்பவம் வெளியில் தெரியவந்த நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் அமீத் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் மீது குவ முசங்  மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறாமலும், ஏற்கனவே திருமணம் செய்த இரண்டு மனைவிகளிடம் அனுமதி பெறாமலும் சிறுமியை அமீத் திருமணம் செய்ததாக கூறியுள்ள நீதிமன்றம் அவருக்கு அபராத தொகையாக இந்திய தொகையில் ரூ.14 ஆயிரம்  விதித்தது.

அமீத்தின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை. குறித்த அபராத தொகையை அமீத் நேற்று செலுத்தியுள்ளார் மேலும், நார்திவாத் இஸ்லாமிய மதக் கவுன்சிலிடமிருந்து திருமண சான்றிதழையும் அமீத் பெற்று கொண்டதாக தெரியவந்துள்ளது.இதனிடையில் தான் திருமணம் செய்துள்ள சிறுமியுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக அமீத் கூறியுள்ளார்.

Next Story