ஆப்கானின் ஜலலாபாத்தில் அரசு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு


ஆப்கானின் ஜலலாபாத்தில் அரசு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 July 2018 10:13 AM GMT (Updated: 11 July 2018 10:13 AM GMT)

ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத்தில் அரசு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். #Afghanistan #JalalabadAttack

காபூல்,

ஜலலாபாத்தில் உள்ள அரசு கட்டிடத்திற்குள் ஆயுதம் தாங்கிய  பயங்கரவாதிகள் திடீரென புகுந்து, தாக்குதலை நடத்தினர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை கட்டிடத்திற்குள் புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்கள்  உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் சிக்கியிருந்த 50 பேரை பாதுகாப்பு படை வெளியே கொண்டுவந்தது, பயங்கரவாதிகளையும் வேட்டையாடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரும் சண்டையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. தலிபான் அல்லது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story