உலக செய்திகள்

விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியர்; இடது கை நிரந்தர ஊனமடைந்தது + "||" + Shridhar Chillal's hand permanently handicapped for not cutting nails for 66 years

விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியர்; இடது கை நிரந்தர ஊனமடைந்தது

விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியர்; இடது கை நிரந்தர ஊனமடைந்தது
விரல் நகங்களை 66 வருடங்களாக வெட்டாத இந்தியரின் இடது கை நிரந்தர ஊனமடைந்துள்ளது.

நியூயார்க்,

மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (வயது 82).  கடந்த 1952ம் ஆண்டில் இருந்து தனது இடது கையில் உள்ள விரல் நகங்களை அவர் வெட்டவில்லை.  இதனால் வளர்ந்து கொண்டே சென்ற அவை உலகின் அதிக நீளம் கொண்ட விரல் நகங்கள் என்ற சாதனையை படைத்துள்ளன.

அவரது மொத்த விரல் நகங்களின் நீளம் 909.6 சென்டி மீட்டர்கள்.  இதில் பெருவிரல் நகம் 197.8 சென்டி மீட்டர்களுடன் அதிக நீளம் கொண்டுள்ளது.

ஒரு கையில் நீண்ட விரல் நகங்களை கொண்ட நபர் என்ற பெருமையுடன் கடந்த 2016ம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் தனது விரல் நகத்தினை வெட்டுவதற்கு முன்வந்த அவரை ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் மியூசியம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றது.

டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள இந்த மியூசியத்தில் சில்லாலின் நகங்களை வெட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  அந்த மியூசியத்தில் அவரது நினைவாக நகங்கள் வைத்து பாதுகாக்கப்படும்.

இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகள் உள்ளனர்.  வயது முதிர்ச்சி அடையும்பொழுது விரல் நகங்களை பராமரிப்பது ஒரு சவாலாக இவருக்கு இருந்துள்ளது.  தூங்குவதற்கு கூட அதிக சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார்.

இந்த விரல் நகங்கள், ஒரு 3 அடுக்கு கட்டிடத்தின் உயரமுடன் மொத்தம் 31 அடி நீளம் கொண்டுள்ளன என ரிப்ளீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சில்லால், தொடர்ந்து 66 வருடங்களாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்த நிலையில், அவை வளர வளர எடை கூடி அவரின் இடது கை நிரந்தர ஊனமடைந்தது.  மூடிய நிலையில் இருந்து தனது கையை திறக்கவோ அல்லது விரல்களை வளைக்கவோ அவரால் முடியாது என தெரிவித்துள்ளது.