ரஷ்ய அதிபர் புதின் எதிரி இல்லை; போட்டியாளர்தான்: டொனால்டு டிரம்ப் விளக்கம்


ரஷ்ய அதிபர் புதின் எதிரி இல்லை; போட்டியாளர்தான்: டொனால்டு டிரம்ப் விளக்கம்
x
தினத்தந்தி 12 July 2018 12:39 PM GMT (Updated: 12 July 2018 12:39 PM GMT)

ரஷ்ய அதிபர் புதின் தனக்கு எதிரி இல்லை எனவும் போட்டியாளர்தான் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். #DonaldTrump

வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். உலகம் முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

“ ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க இருப்பது, எனது ஐரோப்பிய பயணத்தில் மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். புதின் எனது போட்டியாளர்தான், எதிரி இல்லை. ஒருநாள் புதின் எனது நண்பராக கூட ஆகலாம் என்ற நம்பிக்கை உள்ளது. புதினை, அவ்வளவாக நான் அறிந்து வைத்திருக்கவில்லை. 

புதினுடனான சந்திப்பின் போது, ஆயுத கட்டுப்பாட்டு விவகாரம், ஐ.என்.எப் ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவது, புதிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது. உக்ரைன் விவகாரம், சிரியா விவகாரத்தில் தீர்வு காண்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்போம்” என்றார். 

Next Story