உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் மூண்டு உள்ள நிலையில், தனது இடைநிலை பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும் என தென்கொரியா கவலை தெரிவித்து உள்ளது.
* தாய்லாந்து நாட்டில் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்பட்டு விட்ட நிலையில், குகை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மீட்பு முகாம் (பணித்தளம்) கலைக்கப்பட்டு விட்டது. அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.


* அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைகிறவர்களையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்க டிரம்ப் எடுத்த கொள்கை கொடூரமானது என சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா சாடி உள்ளார்.

* ஜப்பான் மழை வெள்ளத்தில் பலி ஆனவர்களின் எண்ணிக்கை நேற்று 195 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் அங்கு 2 லட்சம் குடும்பங்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதியுறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

* சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும், அவரது சகோதரி பர்யல் டால்புருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் (25–ந் தேதி)
சம்மன் எதுவும் அனுப்பக்கூடாது என மத்திய புலனாய்வு முகமைக்கு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.