உலக செய்திகள்

பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி 20 வயது இளம் நடிகை சாதனை + "||" + Kylie Jenner: How the reality teen founded a cosmetics empire

பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி 20 வயது இளம் நடிகை சாதனை

பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி 20 வயது இளம் நடிகை சாதனை
போர்ப்ஸ் இதழின் அட்டைப்படத்தில் 20 வயதிலே இடம் பிடித்து, பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி இளம் நடிகை ஒருவர் சாதனை படைத்துள்ளார். #KylieJenner #MarkZuckerberg

நியூயார்க், 

இப்போது ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, அமெரிக்காவில் சுயமாக உருவாகி பணக்காரர்களாகி இருக்கிற 60 பெண்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது.

இதில் போர்ப்ஸ் இதழின் அட்டைப்படத்தில் 20 வயதிலே இடம் பிடித்து, பேஸ்புக் அதிபர் மார்க்கை பின்னுக்கு தள்ளி இளம் நடிகை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருபவர், 20 வயதான இளம் நடிகை கெய்லி ஜென்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மட்டும் $100 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார்.இதை தவிர்த்து சினிமா துறையில் நடிப்பிற்கு வந்து மூன்று வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், $900 மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார். இதன் காரணமாக உலகின் பணகாரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின் அட்டைபடத்தில் இடம்பெற்று உள்ளார்.

இதன் மூலம், பேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்பெர்க் தனது 23 வயது வைத்த சாதனையை முறியடித்து கெய்லி  முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள், ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி ஆவார்கள்.‘போர்ப்ஸ்’ பட்டியலில் ஜெயஸ்ரீ உல்லாலுக்கு 18–வது இடமும், நீரஜா சேத்திக்கு 21–வது இடமும் கிடைத்து உள்ளது.