உலக செய்திகள்

அவ்வளவு அன்பு...! தோளை அணைத்தபடி கணவரின் உடலோடு தன்னை உயிருடன் புதைத்து கொண்ட மனைவி + "||" + The wife who made the ultimate sacrifice for a 3,000-year loving embrace: Man and woman found together in Ukrainian grave after she was buried ALIVE with her dead husband

அவ்வளவு அன்பு...! தோளை அணைத்தபடி கணவரின் உடலோடு தன்னை உயிருடன் புதைத்து கொண்ட மனைவி

அவ்வளவு அன்பு...! தோளை அணைத்தபடி கணவரின் உடலோடு தன்னை உயிருடன் புதைத்து கொண்ட மனைவி
தனது கணவனின் மேல் உள்ள பிரியத்தால் அவன் இறந்த பின்னும் அவனோடு வாழ முடிவெடுத்த மனைவி, கணவரின் உடலோடு தன்னை புதைத்து கொண்டார்.


உக்ரனை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெர்னொபில் மேற்கு உகரைன்  நகரம் அருகில் இரண்டு உடல்கள் சமாதியான நிலையில் வெறும் எலும்பு கூடுகளாக கண்டெடுத்தனர். அது  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதான அந்த எலும்புக்கூடுகள்  இருந்த நிலை ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. கணவன் உடல் அருகே மிகுந்த காதலோடு அவனது கழுத்தின் பின்புற கைகள் நுழைத்து தோளை அணைத்தபடி அவனது நெற்றியோடு தனது நெற்றியை வைத்து நேர்பார்வை பார்த்தபடி அந்த பெண் இறந்து போயிருப்பதாக எலும்புகளின் படுத்திருந்த வடிவத்தை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பண்டைய உக்ரைன் கலாச்சாரம் மிக மென்மையானது என்றும் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் விய்ய்சோட்ஸ்கியா அல்லது ஒய்சோகோ  என்று அழைக்கப்பட்டது என்று  கூறுகிறார்கள். 

இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்த உக்ரைன் தொல்பொருளியல் நிறுவனம் மீட்பு தொல்பொருள் சேவை டிராஸ்பர்கதியன் கிளை இயக்குனர் டாக்டர் பண்டிரிவிஸ்கை கூறுகையில் 

இந்த எலும்புகளின் இருப்பை பார்க்கும்போது ஏற்கனவே இறந்த கணவனை பிரிய மனமில்லாத மனைவி அல்லது கணவனை தனியே வானுலகத்துக்கு அனுப்ப விரும்பாத மனைவி தனது சுய விருப்பத்துடன் தன்னை தானே உயிருடன் புதைத்து இறந்திருக்கலாம் என்று கூறினார். 

இறக்கும் முன்பு வலியில்லாமல் இறப்பதற்காக விஷம் குடித்து அந்த பெண் உயிரோடு சமாதி ஆகியிருக்கலாம் என்று தொல்லியில் நிபுணர்கள் தெரிவித்தனர். அவர்கள் காட்டிய புகைப்படத்தை பார்க்கும்போது இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. மேலும் பண்டைய கால உக்ரைன் மக்கள் காதல் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு அணுகினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது. எத்தனையோ புகைப்படங்களில் வெளிப்படுகின்ற காதல்கள் நேர்மையற்று நீர்த்து போய் விடுகின்ற இந்த சமகாலத்திய காதல்களோடு ஒப்பிடுகையில் கணவனை அணைத்தபடி பத்திரமாக அவனது அருகாமையில் இறந்து போயிருக்கும் இந்த பெண்ணும் அந்த ஆணும் காலங்கள் தாண்டியும் இன்னும் காதலித்தபடியேதான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் தற்கொலை
பிரான்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் ஒருவர், தேவாலயத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. நைஜிரியாவில் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்கு விற்கும் வழக்கம்
நைஜிரியாவில் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்கு விற்கும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
3. மன அழுத்தத்தை போக்க சவப்பெட்டி சிகிச்சை; பொதுமக்கள் அதிர்ச்சி
மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவர் ஒருவர் நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து புதைத்து சிகிச்சை அளிக்கிறார்.
4. கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உள்பட 400 வகை விலங்குகளுடன் வாழும் முதியவர்
கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உள்பட 400 வகை விலங்குகளுடன் 67 வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
5. அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளது
அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.