பால்கனியின் கம்பிகளுக்கிடையே கழுத்து சிக்கி தொங்கிய குழந்தைகள்


பால்கனியின் கம்பிகளுக்கிடையே கழுத்து  சிக்கி தொங்கிய குழந்தைகள்
x
தினத்தந்தி 13 July 2018 11:11 AM GMT (Updated: 13 July 2018 11:11 AM GMT)

சீனாவில் வீட்டின் பால்கனியில் உள்ள கம்பிகளுக்கிடையே சிக்கி கதறி அழுத குழந்தைகளை அங்கிருந்த சிலர் காப்பாற்றியுள்ளனர்.

சீனாவின் சோங்கிங்  மாகாணத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் முதல் மாடியில் கடந்த செவ்வாய்கிழமை இரண்டு குழந்தைகள் அங்கிருக்கும் பால்கனியின் கம்பிகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளின் கழுத்துப் பகுதி கம்பியில் சிக்கிய நிலையிலும், பாதி உடல் வெளியிலும் என சுமார் 10 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு கதறி அழுதுள்ளனர்.

இதைக் கண்ட அவ்வழியே சென்றோர், உடனடியாக மூன்று ஏணிகளை எடுத்து வந்து குழந்தைகளை உயரத்தி பிடித்திருந்ததாகவும், வெளியில் சென்றிருந்த பெற்றோர் அதற்கு வந்துவிட்டதால், குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த குழந்தைகளின் பெற்றோர் பிளே கார்ட் விளையாட்டு விளையாடுவதற்காக குழந்தைகளை வீட்டில் விட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதா? போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதால், குழந்தைகளுக்கு உதவிய நபர்களுக்கு இணையவாசிகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story