உலக செய்திகள்

லாகூரை நோக்கி கட்சி தொண்டர்கள் படையெடுப்பு, நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது + "||" + Situation tense in Lahore, incidents of stone pelting Nawaz Sharif s flight diverted to Islamabad.

லாகூரை நோக்கி கட்சி தொண்டர்கள் படையெடுப்பு, நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது

லாகூரை நோக்கி கட்சி தொண்டர்கள் படையெடுப்பு, நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது
லாகூரை நோக்கி கட்சி தொண்டர்கள் படையெடுத்ததை அடுத்து நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் திருப்பப்பட்டது. #NawazSharif


லாகூர்,

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று கைது ஆகிறார். விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.  அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்து, ஏற்பாடு ஆகி உள்ளது. நவாஸ் ஷெரீப்பையும், மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படும் என வெளியாகியது.

இதற்கிடையே லாகூரை நோக்கி அவரது கட்சியின் தொண்டர்கள் படையெடுத்து உள்ளனர், இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. லாகூரில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து நவாஸ் செரீப் விமானம் இஸ்லாமாபாத் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.