உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஓட்டல், அமெரிக்கர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்க முடிவு செய்து இருக்கிறது.
* எகிப்து நாட்டில் கெய்ரோ விமான நிலையத்துக்கு வெளியே உள்ள ரசாயன ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

* லண்டனில் நவாஸ் ஷெரீப் வீட்டுக்கு வெளியே அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில், அவர்களை நவாஸ் ஷெரீப் பேரன்கள் ஜூனைத் சப்தாரும், ஜக்கரியாவும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருவரில் ஜூனைத் சப்தார், நவாஸ் ஷெரீப் மகள் மரியமின் மகன் என்பதும், ஜக்கரியா, நவாஸ் ஷெரீப் மகனான உசேன் நவாசின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையில் இருந்து, பிரான்ஸ் நிறுவனங்களுக்கு விதிவிலக்கு வழங்க முடியாது என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

* தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும், அந்த குகைக்குள் மொத்தம் ஒரு மணி நேரமே செலவிட்டு சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது.

* பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தனது கட்சி ஆட்சி, பாகிஸ்தானில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க பாடுபடும் என அவர் தெரிவித்தார்.