ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை எகிப்தில் இரு வெவ்வேறு வழக்குகளில் அதிரடி


ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை எகிப்தில் இரு வெவ்வேறு வழக்குகளில் அதிரடி
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 8:43 PM GMT)

எகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.

கெய்ரோ,

கிரிமினல் கோர்ட்டு விசாரணையில் கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் போலீசார் சாட்சியம் கூறினர்.

விசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய எல் ஜகாஜிக் கோர்ட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நேற்றுமுன்தினம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதே போன்று, அங்கு உள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.

தண்டிக்கப்பட்ட 13 பேரும் 2016–ம் ஆண்டு, சிறையில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவ்விரு வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


Next Story