இங்கிலாந்துக்கு டிரம்ப் அதிரடி யோசனை


இங்கிலாந்துக்கு டிரம்ப் அதிரடி யோசனை
x
தினத்தந்தி 15 July 2018 10:15 PM GMT (Updated: 15 July 2018 7:55 PM GMT)

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்புகிறது. அந்த முடிவை பெரும்பாலான மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஆதரித்தனர்.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்புடன்  விலகல் தொடர்பாக  இங்கிலாந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுடன் இணைந்து பேட்டி அளித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பு பிரச்சினை குறித்து தெரசா மேவுக்கு யோசனை கூறி இருப்பதாக தெரிவித்தார்.

அந்த யோசனை பற்றி தெரசா மேவிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘விலகல் தொடர்பாக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அதன் மீது வழக்கு தொடருங்கள் என்று டிரம்ப் கூறினார். அது கொடூரமான அறிவுரை. நான் பேச்சுவார்த்தையில் அமர்ந்து, இங்கிலாந்துக்கு தேவையானதை பெற விரும்புகிறேன்’’ என்று கூறினார்.


Next Story